Sunday 18 September 2011

SMOKE CART AND SMOKE PICTURE

புகைவண்டியும் புகைப்படமும்



           Train என்னும் ஊர்தியை புகை வண்டி என்று தமிழில் எழுத ஆரம்பித்தார்கள். அப்போதெல்லாம் புகையையும் நீராவியையும் குப் குப் என்று விட்டுக்கொண்டே சென்றது. சிக்கு புக்கு என்றாலே ட்ரெய்ன் வண்டியைக் குறிக்கக்கூடிய அளவிற்கு அது பரிச்சயமாகிவிட்டது.
ஆனால் இப்போதெல்லாம் ட்ரெய்ன் வண்டி புகையை விட்டுக்கொண்டு செல்வதில்லை. எஞ்சினெல்லாம் இப்போது டீசலில் ஓடுகிறது. அல்லது மின்சாரத்தில் ஓடுகிறது. காந்த சக்தியால் ஓடும் ட்ரெய்ன்களும் இருக்கின்றன.
ஆனாலும் ட்ரெய்னைப் புகைவண்டி என்று சொல்லவில்லையென்றால் சில தமிழ்ப் பற்றாளர்களுக்குக் கோபம் வந்துவிடுக்கிறது.
ரயில் வண்டி என்ற சொல்லும் அதிகமாக வழக்கில் இருந்தது. ஆனால் அதையும் தூய தமிழ்ச் சொல் இல்லையென்று ஒதுக்குவார்கள்.
Rail என்னும் தண்டவாளங்களில் செல்வதால்தான் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அதை ரயில் வண்டி சொல்லலானார்கள். அது இன்றளவுக்கும் புழக்கத்தில் இருந்து வருகிறது. Railways என்ற சொல்லும் பிடித்தபிடியாக இன்னும் இருந்து வருகிறது.
        மலேசியாவில் தண்டவாளத்தைக் 'கம்பிச் சடக்கு' என்று சொல்வார்கள். 'சடக்கு' என்றால் தெரு, வீதி.





Photograph என்பதையும் புகைப் படம் என்று சொல்கிறார்கள். புகைக்கும் அந்தப் படத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை.
சிலர் நிழற்படம் என்றும் சொல்கிறார்கள். நிழலுக்கு உரிய அர்த்தத்துக்கும் கேமராவின் உட்புறத்தில் விழும் Image-ஜுக்கும் வித்தியாசமுண்டு. அது நிழலல்ல. பிரதிபிம்பம், பிரதிபலிப்பு என்பதுகூட Reflection என்பதைத்தான் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அதுவும் டிஜிட்டல் சமாச்சாரங்கள் என்றால் அவை எங்கேயோ போய்விட்டன.
இவற்றையெல்லாம் Update செய்யவேண்டுமோ?


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



No comments:

Post a Comment